samedi 11 mai 2013

நெற்றிப்பொட்டு




நெற்றிப்பொட்டு!

நெஞ்சை மயக்கும்
மந்திர மையோ?

காதல் கடலின்
சுழலோ?

என்னுயிரைப்
பொட்டென்று சுடுவதால்
பொட்டோ?

இறைவனுக்கு
நெற்றிக்கண்!
என்னவளுக்கு
பொட்டும் கண்!

வட்டப் பொட்டழகு
என்னை
வட்டமிடச் செய்யும்!

வண்ண மலரின்
மகரந்தம்
வட்டப் பொட்டு!
எண்ணத்தின் சுடராக
நீட்டுப் பொட்டு!

சிவப்புப் பொட்டுச்
செம்மையைக் காட்டும்!

பச்சைப்பொட்டுப்
பசுமையைக் கூட்டும்!

நீலப் பொட்டு
நினைவினை வாட்டும்!

மஞ்சள் பொட்டு
மகிழ்ச்சியை ஊட்டும்!

கோடிக் கற்பனையைக்
கொட்டும் பொட்டே! - உன்னைக்
கூடி மகிழ்ந்து
கொஞ்சுவது எந்நாளோ?

11.05.2013

11 commentaires:

  1. கோடிக் கற்பனைகளும்
    மெய்யானதாய்
    மாறிக் கொஞ்சும்
    நாள் விரைவில் வரும் நண்பா...

    வாழ்த்துகள்... அழகுக் கவிதை...

    RépondreSupprimer
    Réponses

    1. இரவின் புன்னகை! இன்பப் புன்னகை!
      வருகைக்கும் கருத்திற்கும்
      நன்றி நவின்றேன்!

      Supprimer
  2. வணக்கம் சகோதரரே!...

    பொட்டுக்குப் பாட்டெழுதி
    பொருள் புதைத்துவைத்தீரே
    மெட்டுப் போட்டிதைப்பாட
    மெல்ல எண்ணுதே நெஞ்சம்!.

    மிக அருமை! நல்ல சொல் நயம். மிகச் சிறப்பாக உள்ளது.
    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. இளமதி தந்த இனிய கருத்தை
      உளமதில் கொண்டு உவக்கிறேன் நானே!

      Supprimer
  3. முதன் முறை தங்களின் த்ளத்திறகு வருகை தந்தேன். நன்று. இனி தொடர்வேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. கரந்தையார் வருகை கற்கண்டு இனிப்பு
      வருகைக்கு நன்றி!

      Supprimer
  4. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_39.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    RépondreSupprimer
  5. Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...

    RépondreSupprimer
  6. வணக்கம் !
    வட்ட வட்டப் பொட்டிட்டு
    வந்த மங்கை மனம் மகிழ
    இட்ட நற் கருத்திற்கு
    இசைந்தாடுதே நெஞ்சம் !

    வாழ்த்துக்கள் அருமையான கவிதை வரிகள்
    கண்டு மகிழ்ந்தேன் .இன்று தான் தங்களின்
    தளத்தினை அறிந்து கொண்டேன் தொடர்கிறேன்
    என்றும் தமிழோடு இணைந்திருப்போம் .

    RépondreSupprimer
  7. மிகவும் அருமைக்கவி.

    RépondreSupprimer