mercredi 15 août 2012

தமிழ்ச்செல்வம்


அன்பும் பண்பும்
அருந்தமிழ்ச்செல்வம்!

மறமும் மாண்பும்
மணித்தமிழ்ச்செல்வம்!

கனிவும் கருணையும்
கவித்தமிழ்ச்செல்வம்

பண்ணும் பாட்டும்
பைந்தமிழ்ச்செல்வம்

இனிமையும் எளிமையும்
இன்றமிழ்ச்செல்வம்

முதுமையும் இளமையும்
முத்தமிழ்ச்செல்வம்!

புதுமையும் பொதுமையும்
புகழ்த்தமிழ்ச்செல்வம்!

வன்மையும் வாய்மையும்
வண்டமிழ்ச்செல்வம்!

தொன்மையும் துாய்மையும்
சுடா்த்தமிழ்ச்செல்வம்!

வண்ணமும் சந்தமும்
வண்டமிழ்ச்செல்வம்!

பத்துப்பாட்டும்
எட்டுத்தொகையும்
படா்தமிழ்ச்செல்லம்!

சிலம்பும் மேகலையும்
செந்தமிழ்ச்செல்வம்!

நீதி நுால்களும்
சோதி நுால்களும்
நெடுந்தமிழ்ச்செல்வம்!

வள்ளுவா் குறளும்
வள்ளலார் அருளும்
வான்தமிழ்ச்செல்வம்!

காலம் வென்ற
கம்பன் காவியம்
கன்னித்தமிழின்
கோலத்செல்வம்!

முறுக்குமீசைப் பாரதியும்
நறுக்குமீசைப் பாவேந்தும்
செருக்குமீசை பாவாணரும்
பசுந்தமிழ் காத்த படைச்செல்வம்!

கண்ணதாசனின் கவிதைகள்
கன்னல்தமிழின் காதல் செல்வம்!

இத்தனைச் செல்வங்கள்
என்தமிழ் பெற்றிருந்தும்
அடியேன் கிறுக்கும்
பொடி பொடி கவிதைகளைச்
செல்வமாய்க் கெண்டனையே!

தமிழ்ச்செல்வன்
14.08.2012

1 commentaire:

  1. ஆகா! இத்தனை செல்வங்களா? தொடருங்கள்

    என்னுடைய தளத்தில் தன்னம்பிக்கை

    RépondreSupprimer