அப்படிப் பார்த்துப் பார்த்து
என்னைக் கொல்லாதே!
பிடித்திருக்கிறது என்று சொல்!
அல்லது
பிடிக்கவில்லை என்று சொல்
என்னிடம் நீ
பேசுகின்ற நொடி பொழுது போதுமடி!
உன்பெயா் சொல்லிச் சொல்லித்
துடிகிறது இதயம்!
காதலைப்
படிக்கிறது பருவம்!
நடிக்கிறாய் நீ!
கண்ணீா்
வடிக்கிறேன் நான்!
கணக்குப் பாடம்
உனக்குப் பிடிக்காதென்று அறிந்தேன்!
அதனால்தான்
கண்கள் போடும்
காதல் கணக்கை
வெறுக்கிறாயோ?
உன்னழகைச் சுவைக்கவா
எண்ணுகிறேன்?
உன்னழகைச் செந்தமிழில்
சமைக்கவே எண்ணுகிறேன்!
அழகு இராஜ்ஜியமே!
தாஜ்மகால் கட்ட
நான் அரசனில்லை!
சங்கத் தமிழெடுத்துக்
தங்கக் கோபுரம்
கட்டுகிறேன்!
கண்ணே வருக - உன்
கடடழகைப் போற்றிக்
கவிமலா் கொட்டுகிறேன் !
15.08.2012

Aucun commentaire:
Enregistrer un commentaire